sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் 5 இளம்பெண்கள் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் 5 இளம்பெண்கள் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 5 இளம்பெண்கள் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் 5 இளம்பெண்கள் மாயம்


ADDED : செப் 08, 2024 01:16 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெவ்வேறு சம்பவத்தில் 5 இளம்பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி, செப். 8-

கல்லாவி அடுத்த ஆனந்துாரை சேர்ந்தவர் யாஷ்மின், 19; மொரப்பூரிலுள்ள ஒரு தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 5 இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகாரளித்தனர். அதில், ஊத்தங்கரை அடுத்த வெள்ளையம்பதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன்ராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஊத்தங்கரை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் நித்யா, 20; கடந்த, 4ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரின் பெற்றோர் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* காவேரிப்பட்டணம் அண்ணாநகரை சேர்ந்தவர் நசியா கவுசர், 20; வன்னியபுரத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். கடந்த, 5ல், வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெண்ணின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். அதில், கெலமங்கலத்தை சேர்ந்த ராஜி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஓசூர், நெசவாளர் தெருவை சேர்ந்தவர் சரவணன் மனைவி சத்யா, 30. கடந்த, 5 இரவு, 7:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் புகாரில், நெசவாளர் தெருவை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் சீனிவாசன், 51, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஓசூர் டவுன் போலீசார், சத்யாவை தேடி வருகின்றனர்.

* பேரிகை அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஸ்வப்னா, 21, கூலித்தொழிலாளி; கடந்த, 1 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் வெங்கடலட்சுமி, 45, பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், சென்னசந்திரத்தை சேர்ந்த டிரைவர் நந்தீஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us