/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு நிலத்தில் பாறைகளை வெட்டி திருடிய 6 பேர் மீது வழக்கு பதிவு
/
அரசு நிலத்தில் பாறைகளை வெட்டி திருடிய 6 பேர் மீது வழக்கு பதிவு
அரசு நிலத்தில் பாறைகளை வெட்டி திருடிய 6 பேர் மீது வழக்கு பதிவு
அரசு நிலத்தில் பாறைகளை வெட்டி திருடிய 6 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 05, 2024 01:51 AM
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மலையில் பாறைகளை வெட்டி திருடியதாக, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே கொண்டேப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மலையிலிருந்த பாறைகளை, அனுமதி பெறாமல், அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கற்களை வெட்டி, மர்ம நபர்கள் திருடியதாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில், வி.ஏ.ஓ., சரவணன் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணையில், மூங்கில்புதுாரை சேர்ந்த துரை, சேட்டு, பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த தங்கராசு, மலைசந்து கிராமத்தை சேர்ந்த ஹரி, ஆனந்த் ஆகியோர் கற்களை வெட்டி எடுத்து திருடி சென்றது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே, கங்கலேரி கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறை கற்களை வெட்டி திருடியதாக, அப்பகுதி வி.ஏ.ஓ., சீதா, 35, தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்படி, மலைசந்து கிராமத்தை சேர்ந்த ஹரி, ஆனந்த் மீது, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே, கொம்பள்ளியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறைகளை, அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் வெட்டி கடத்தியதாக, ஜிங்குபள்ளி வி.ஏ.ஓ., கிருஷ்ணன், 56, புகார் படி, ராமநாயக்கனப்பள்ளியை சேர்ந்த ரவி மீது, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.