/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 24, 2024 07:30 AM
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 22 மற்றும், 23 என இரண்டு நாள் சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் கூறியதாவது: ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள, ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளில் ஒன்றான, கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறைப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தொழில் நுட்ப உதவியாளர்கள், பதிவறை எழுத்தர் நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ள அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, இரண்டு நாள் சிறுவிடுப்பு போராட்டம் நடந்தது.
இவ்வாறு கூறினார்.
இதே போல் கடந்த இரு நாட்களாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பி.டி.ஓ., அலுவலகங்களிலும், பணியாளர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

