/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரிக்கு ரயில்; 6 மாதத்தில் செய்து தர நடவடிக்கை
/
ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரிக்கு ரயில்; 6 மாதத்தில் செய்து தர நடவடிக்கை
ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரிக்கு ரயில்; 6 மாதத்தில் செய்து தர நடவடிக்கை
ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரிக்கு ரயில்; 6 மாதத்தில் செய்து தர நடவடிக்கை
ADDED : ஏப் 13, 2024 10:47 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரிக்கு ரயில் திட்டங்களை வெற்றி பெற்று, 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பேசினார்.கிருஷ்ணகிரி அடுத்த வேலம்பட்டி, ஜெய்னுார், மாரிசெட்டிஹள்ளி, என்.தட்டக்கல், மொசரப்பட்டி, சொப்பனுார் கூட் ரோடு, தேவீரஹள்ளி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
கடந்த மூன்றாண்டு, தி.மு.க., ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. போதை பொருட்கள் எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கிறது. தொழில்கள் முடங்கியுள்ளது. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை. ஆனால் கடந்த, 10 ஆண்டு மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை கூட நிறைவேற்றாமல், தமிழகத்தை அதள பாதாளத்தில் தி.மு.க., அரசு தள்ளியுள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டுமெனில் மத்தியில் மீண்டும் பா.ஜ., அரசு ஆட்சியமைக்க வேண்டும். மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி, தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பார்.
கிருஷ்ணகிரிக்கு ரயில் நிலையம், ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி ஓசூர் ரயில் திட்டம், கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரயில், பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு மெட்ரோ ரயில், ஓசூரில் விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள், 6 மாதத்தில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பா.ஜ.,வுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளித்து, என்னை பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

