/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

ADDED : மே 30, 2024 09:42 PM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளி, அகலக்கோட்டை, கண்டகானப்பள்ளி, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில், மூன்று யானைகள் இரவில் சுற்றித்திரிந்து அப்பகுதி விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.
நேற்று முன்தினம் இரவு, மூன்று யானைகளும் தேன்கனிக்கோட்டை அருகே சாவரபத்ரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு சென்றன. அப்போது அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இறங்கிய போது, அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது ஒரு யானை உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து அந்த யானை பலியானது. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது, 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என, தெரிந்தது.
கடந்த மாதம் தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளியில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி ஒரு யானை பலியானது குறிப்பிடத்தக்கது.