/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
/
பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 17, 2024 02:06 AM
கிருஷ்ணகிரி: -கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளியில், 10, 11 மற்றும், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், சிறப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்ற, மாநில மற்றும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்ற, மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி கல்விக்
குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். விழாவில், 12ம் வகுப்பு தேர்வில், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, 172 மாணவ, மாணவியர், 11ம் வகுப்பு தேர்வில், 500 மதிப்பெண்களுக்கு மேல்பெற்ற, 185 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில், 500க்கு, 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, 320 மாணவ, மாணவியர் என மொத்தம், 677 மாணவ, மாணவியருக்கும், கடந்த, 20 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி என்ற
சாதனைக்கு காரணமான ஆசிரியர்
களுக்கும், பள்ளியின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி., பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பேசினார்.
இதில், பள்ளி முதல்வர் மெரினா பலராமன், துணை முதல்வர் ஜலஜாக்சி, தலைமை ஆசிரியர் குலசேகர பாண்டியன், பள்ளி பொறுப்பாளர் யுவராஜ், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

