sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவி பலாத்கார வழக்கில் கைதானவர் தப்பியோட முயன்ற போது கால் முறிவு

/

மாணவி பலாத்கார வழக்கில் கைதானவர் தப்பியோட முயன்ற போது கால் முறிவு

மாணவி பலாத்கார வழக்கில் கைதானவர் தப்பியோட முயன்ற போது கால் முறிவு

மாணவி பலாத்கார வழக்கில் கைதானவர் தப்பியோட முயன்ற போது கால் முறிவு


ADDED : ஆக 20, 2024 04:46 AM

Google News

ADDED : ஆக 20, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அருகே, கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில், இரு வாரங்களுக்கு முன் நடந்த, என்.சி.சி., முகாமில் பங்கேற்ற, 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர், 16ம் தேதி அளித்த புகார்படி, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, நாம் தமிழர்கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் சிவராமன், 29, என தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்சியிலிருந்து அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீக்கினார்.

சிவராமனை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சிவராமன் வேறு சில மாணவியரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.

இந்த விஷயத்தை பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மறைத்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.கைதான சிவராமன் நேற்று காலை போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற போது தவறி விழுந்து, அவரது வலது கால் எலும்பு முறிந்தது.

போலீசார் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குற்றத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர்கள், ஒரு ஆசிரியை உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாலியல்குற்றத்தை மறைக்க முயன்றதாக அப்பள்ளி ஆசிரியை கந்திக்குப்பத்தை சேர்ந்த கோமதி, 52, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பள்ளிக்கு நேற்று விடுமுறை அளித்த நிலையில், பள்ளி மற்றும் பர்கூர், மிட்டப்பள்ளி, எமக்கல்நத்தம் அச்சமங்கலம் கூட்ரோடு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சிவராமன் இதேபோல எந்தெந்த பள்ளிகளில், என்.சி.சி., முகாம் நடத்தியுள்ளார். அவரால் எந்தெந்த பள்ளிகளில் மாணவியர் பாதிக்கப்பட்டனர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

என்.சி.சி., அலுவலகம் விளக்கம்


தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிகோபார் என்.சி.சி., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அருகே, பள்ளி மாணவி பங்கேற்ற, என்.சி.சி., முகாம் போலியானது.

அதை நடத்தியவர்களுக்கும், என்.சி.சி.,க்கும் எந்த தொடர்பும் இல்லை. என்.சி.சி., நடக்கும் பள்ளி கள் பட்டியலில், சம்பந்தப்பட்ட பள்ளி இல்லை. அவர்கள் இதற்கானபதிவும் செய்யவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்திலுள்ள, கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில், என்.சி.சி., யூனிட் நடத்த பதிவு செய்யவில்லை. எவ்வித அனுமதியோ, ஆவணங்களோ இன்றி, போலியான நபர்களால் என்.சி.சி., முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது. சி.இ.ஓ., மூலம் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடக்கிறது.

முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளோம். இப்பள்ளியில் இதற்கு முன், இதுபோன்ற சம்பவங்கள், விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், எந்தெந்த பள்ளி களில் போலியாக, என்.சி.சி., முகாம்கள்நடந்துள்ளது எனவும் விசாரித்துவருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் விளக்கம்








      Dinamalar
      Follow us