/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் விரைவில் கூடும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு
/
கிருஷ்ணகிரியில் விரைவில் கூடும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு
கிருஷ்ணகிரியில் விரைவில் கூடும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு
கிருஷ்ணகிரியில் விரைவில் கூடும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு
ADDED : ஜூலை 21, 2024 10:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டசபை பேரவை மனுக்கள் குழு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது.
இதையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தனிநபர், சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையப்பமிட்டு தலைவர் மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரியிட்டு, நேரடியாகவோ, மாவட்ட கலெக்டர் மூலமாகவோ, இம்மாதம், 31ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.