/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : மே 17, 2024 02:08 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு போதிய மழையின்றி கடந்த, 4 மாதங்களாக நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இந்த ஆண்டில், 4 முறை அணைக்கு முற்றிலும் நீர்
வரத்து பூஜ்யமாக இருந்தது. கடந்த வாரம் கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையாலும், அம்மாநிலத்தில் ஓடும் கழிவு நீரை சுத்தம் செய்யாமல், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விட்டதாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன், ரசாயன நுரை பொங்க, பச்சை நிறத்தில் தண்ணீர் வந்தது. கடந்த, 3 நாட்களாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதால் கடந்த, 15ல் கே.ஆர்.பி., அணைக்கு 1,126 கன அடி தண்ணீர்
வந்தது.
மழையின்றி கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறைந்ததால், நேற்று கே.ஆர்.பி, அணைக்கு, 453 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் வினாடிக்கு, 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 40.80 அடியாக நீர்மட்டம் இருந்தது.

