/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 15, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி நுழைவு வாயிலில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் மணிவேலு தலைமை வகித்தார். கிளை செய-லாளர் சரவணன், ஏ.ஐ.எப்.யு.சி.டி.ஓ., தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில், பழைய பென்சன் திட்-டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். பேராசிரியர்களின் ஓய்வூ-திய வயதை, 65 ஆக உயர்த்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.