/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுவன் சாவில் தொடர்புடையவர்களை கைது செய்ய மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
சிறுவன் சாவில் தொடர்புடையவர்களை கைது செய்ய மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சிறுவன் சாவில் தொடர்புடையவர்களை கைது செய்ய மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சிறுவன் சாவில் தொடர்புடையவர்களை கைது செய்ய மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 10:50 AM
ஓசூர்: அஞ்செட்டியில், சிறுவன் சாவில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பைல்காடு கிராமத்தை சேர்ந்த கணேசன் - சாந்தா தம்பதியின் மகன் மகேந்திரன், 17; ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த மாதம், 8 ல், துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அஞ்செட்டி போலீசார் தற்கொலை என வழக்குப்பதிந்தனர்.
ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் மகேந்திரனை தாக்கி கொன்று, சடலத்தை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மேல் துாக்கி சென்று, தொட்டி யின் உட்புற படிக்கட்டில், அவரது டி சர்ட்டில் துாக்கில் தொங்க விட்டதாக, மகேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மகேந்திரனை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியின் அஞ்செட்டி வட்டக்குழு சார்பில், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் பேசினார்.