/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.52.91 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
/
ரூ.52.91 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
ADDED : ஜூலை 22, 2024 12:13 PM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் திம்மாபுரம் பஞ்.,ல் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில், 9.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ராமநாதன் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
சுப்பிரமணியபுரத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், 11.95 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமெண்ட் கல் பதிக்கும் பணி நடக்கிறது. தேர்ப்பட்டியில், 22.90 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமெண்ட் கல் பதிக்கும் பணிகள் நடக்கிறது.
காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் சாப்பர்த்தி, புங்கம்பட்டி, வேட்ராயன் கொட்டாய் பகுதிகளில், மாவட்ட ஊராட்சிக்குழு நிதியில் இருந்து, 8.10 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தி.மு.க., அவைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.