ADDED : நவ 03, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற வருகின்றனர்.
ஆனால், மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் இல்லாததால், ஏழை, எளிய மக்கள், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற தொலை துாரத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
பொதுமக்களின் கால விரயத்தை தடுக்கும் வகையில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, ரோட்டரி சங்கம் சார்பில், 7.80 லட்சம் ரூபாய் டயாலிசிஸ் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.
