/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
/
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் அண்ணாதுரை பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2024 02:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அண்ணாதுரையின், 116வது பிறந்த நாள் விழா, கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகம் முன்பு நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, அண்ணாதுரை உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நகர, தி.மு.க., சார்பில், ரவுண்டானா அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதாநவாப் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி நகர, அ.தி.மு.க., சார்பில், ராசுவீதியிலுள்ள அண்ணாதுரையின் சிலைக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
* ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நேற்று
கொண்டாடப்பட்டது. ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் அண்ணாதுரை உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினார். இதில், அ.தி.மு.க., ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.