/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் ஆர்.ஓ., மையத்தை திறக்க தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி
/
பள்ளியில் ஆர்.ஓ., மையத்தை திறக்க தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி
பள்ளியில் ஆர்.ஓ., மையத்தை திறக்க தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி
பள்ளியில் ஆர்.ஓ., மையத்தை திறக்க தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி
ADDED : ஆக 09, 2024 03:13 AM
ஓசூர்: சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள், 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து, 22 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தொட்டி கட்டும் பணி மற்றும் போர்வெல் மற்றும் பைப் அமைக்கும் பணி ஆகியவற்றை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அவர் மூலம், சூளகிரியில் நீண்ட நாட்களாக திறக்-கப்படாமல் உள்ள, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுத்திகரிக்கப்-பட்ட குடிநீர் மையத்தை திறக்க, தி.மு.க., நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். அதற்காக கட்சி சார்பில் பேனர் மற்றும் கொடிகள் நடப்பட்டிருந்தன. மேலும், ஆர்.ஓ., மையத்தின் பூட்டு சாவி யாரிடம் உள்ளது என்பது தெரியாததால், அந்த பூட்டை கட்சி-யினர் உடைத்து புதிய பூட்டு போட்டனர்.
இதையறிந்த, அ.தி.மு.க.,வை சேர்ந்த சூளகிரி பஞ்., தலைவி கலைச்செல்வியின் கணவர் ராமன் மற்றும் அவரது தரப்பினர், வேப்பனஹள்ளி தொகுதிக்குள் சூளகிரி வருவதால், இத்தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான முனுசாமி தான் ஆர்.ஓ., குடிநீர் மையத்தை திறக்க வேண்டும் என கூறி, 2வதாக ஒரு பூட்டு போட்டனர். இந்த ஆர்.ஓ., மையம், கனிமங்களும், குவாரிகளும் திட்ட நிதியில் இருந்து கட்டப்பட்டது. அதன் மோட்டார் பழுதா-னதால், ஒன்றிய பொதுநிதியில் இருந்து சரிசெய்யப்பட்டு பயன்-பாட்டிற்கு திறக்க தயாராக இருந்தது.
நீண்ட நாட்களாக திறக்கப்படாததால், தி.மு.க.,வினர் திறக்க தயாராகினர். போட்டியாக, அ.தி.மு.க.,வினரும் பூட்டு போட்-டதால், பரபரப்பு ஏற்பட்டது. சூளகிரி இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடைசியில் ஆர்.ஓ., மையம் திறக்கப்படாமல், அமைச்சர் வரும் போது திறக்க முடிவு செய்து, விழா தேதி ஒத்திவைக்கப்பட்டது.