sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

/

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்


ADDED : ஆக 18, 2024 03:49 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மருத்து-வர்கள், செவிலியர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் கடந்த, 9ல், முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்-கொடுமை செய்யப்பட்டு, கொலையான சம்பவம் நாடு முழு-வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக, நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் நேற்று, பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, மருத்து-வர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்-டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாவட்ட தலைவர் முத்து-சாமி, இந்திய மருத்துவ சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தன-சேகரன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் பேர-மைப்பு தலைவர் தினேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், கல்லுாரி மாணவ, மாணவியர் தங்கள் முகத்தில் பாலியல் விழிப்புணர்வு வாசகங்களுடன், தேசிய மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பதாகைகளுடன் பேரணி-யாக சென்றனர். பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்திய மருத்துவ சங்க, கிருஷ்ணகிரி பிரிவு தலைவர் செல்வன், செயலாளர் மண்டோதரி, பொருளாளர் கோவிந்தராஜூலு, மருத்து-வர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us