/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோடை வெப்பத்தை தணிக்க ஏரியில் கும்மாளமிடும் யானைகள்
/
கோடை வெப்பத்தை தணிக்க ஏரியில் கும்மாளமிடும் யானைகள்
கோடை வெப்பத்தை தணிக்க ஏரியில் கும்மாளமிடும் யானைகள்
கோடை வெப்பத்தை தணிக்க ஏரியில் கும்மாளமிடும் யானைகள்
ADDED : மே 02, 2024 11:17 AM
ஓசூர்: கோடை வெப்பத்தை தணிக்க, ஜவளகிரி வனச்சரகத்திலுள்ள ஏரியில், யானைகள் கும்மாளமிட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியிலுள்ள இயற்கை குட்டைகள், ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. தண்ணீருள்ள ஏரிகள், குட்டைகளுக்கு யானைகள், காட்டெருமைகள், மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள், தண்ணீர் அருந்த செல்கின்றன. போதிய நீர் கிடைக்காமல், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு வன விலங்குகள் படையெடுகின்றன. ஜவளகிரி வனப்பகுதியிலுள்ள ஒரு ஏரியில் மட்டும் தண்ணீர் உள்ளதால், அங்கு யானை உள்ளிட்ட விலங்குகள் தினமும் தண்ணீர் குடிக்க வந்து செல்கின்றன.
கோடை வெயிலுக்கு இதமாக, ஏரி நீரில் யானைகள் கும்மாளம் போடுகின்றன. கடும் வெயிலால், இந்த ஏரியின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு மேல், இந்த ஏரியில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வன விலங்குகளின் தண்ணீர் தேவையை தீர்க்க, வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

