/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'பார்ட் டைம் ஜாப்' என ஆசைவார்த்தை கூறி தொழிலதிபரிடம் ரூ.19.68 லட்சம் மோசடி

ADDED : மார் 24, 2024 01:30 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபரிடம் 'பார்ட் டைம் ஜாப்' என ஆசை வார்த்தை கூறி, 19.68 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.
கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர், 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 49, தொழிலதிபர்; இவரது சமூக வலைதள பக்கத்திற்கு கடந்த, 2023, டிச., 21 ல் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், 'பார்ட் டைம் கம்ப்ளீட் டாஸ்க் ஜாப்' என்ற தலைப்பில் அவர்கள் அனுப்பும் 'யுடியூப்' லிங்குகளை, 'கிளிக்' செய்தால் ஊதியம், என இருந்தது. அதை செய்த கார்த்திகேயனுக்கு
சிறிதளவு பணம் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவருக்கு, மேலும் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், 'யுடியூப் லிங்க் டாஸ்க் ஜாப்'ல் பணம் முதலீடு செய்தால், லாபத்தொகையுடன், முதலீடு இரட்டிப்பாகும் என இருந்தது. இதை நம்பிய கார்த்திகேயன், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், 19.68 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன்பின் கார்த்திகேயனை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவரை தொடர்பு கொண்ட எண்களும், 'சுவிட்ச் ஆப்' ஆனது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.