/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடிப்பு

ADDED : ஜூலை 30, 2024 03:07 AM
கிருஷ்ணகிரி: ஜெகதேவி, பாலமுருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழாவில் நேற்று, பக்தர்கள் மீது உரல் வைத்து, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி பாலமுருகன் கோவிலில், 79 ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா கடந்த, 28ல் கொடியேற்றத்-துடன் துவங்கியது. நேற்று காலை பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடியுடன், அலகு குத்தி சடல்தேர், கல் உரல், இரும்பு சங்-கிலி, டிராக்டரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள் முருகன், அருண்குமார், ராமன் ஆகியோர் அங்கு அமைத்திருந்த பரண் மீது படுத்துக்கொள்ள, அவர்களது மார்பின் மீது, குந்தானி வைத்து, 15 கிலோ மஞ்-சளை, 2 பேர் உலக்கையால் இடித்தனர். இடித்த அந்த மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.தொடர்ந்து அதே பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்-தரத்தில் பறந்து சென்று, முருகன் சிலைக்கு மாலை அணி-வித்தும், கற்பூரம் காட்டியும், குழந்தையை சுமந்து சென்றும், நேர்த்திக் கடன் செலுத்தினார்.நிகழ்ச்சியை காண, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருவண்-ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநி-லங்களில் இருந்தும், 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்-தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.