/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் திறப்பு
/
தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் திறப்பு
தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் திறப்பு
தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் திறப்பு
ADDED : ஆக 02, 2024 03:42 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, புதுார் புங்கனை கிராமத்தில் நபார்டு திட்-டத்தில், 8.26 கோடி ரூபாய் மதிப்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை, உண-வுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொதுமக்களின் பயன்பாட்-டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், கெங்கபிராம்பட்டி பஞ்., பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 9.50 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பத்துார்- - சேலம் சாலை முதல், மகனுார்பட்டியை இணைக்கும் சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன், ஆர்.டி.ஓ., பாபு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, ஒன்றிய குழு தலைவர் உஷா ராணிகுமரேசன், தாசில்தார் திருமால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம், மாநில மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் டாக்டர் மாலதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கும-ரேசன், எக்கூர் செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்-டனர்.