/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாய் கண்ணெதிரே குழந்தை பலி கார் ஓட்டிய போதை நபர் கைது
/
தாய் கண்ணெதிரே குழந்தை பலி கார் ஓட்டிய போதை நபர் கைது
தாய் கண்ணெதிரே குழந்தை பலி கார் ஓட்டிய போதை நபர் கைது
தாய் கண்ணெதிரே குழந்தை பலி கார் ஓட்டிய போதை நபர் கைது
ADDED : ஏப் 30, 2024 08:25 PM
ஓசூர்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மணிவேல். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர்., நகரில் குடும்பத்துடன் தங்கி, இ.எஸ்.ஐ., ரிங் ரோட்டில் பாஸ்ட் புட் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ரஞ்சனா கிருஷ்டி, 22. இவர்களது மகள் கீர்த்திகா, 3. சம்பவத்தன்று இரவு, 8:10 மணிக்கு, மகளை அழைத்துக் கொண்டு, கணவரின் பாஸ்ட் புட் கடைக்கு, ரஞ்சனா கிருஷ்டி தன் சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில் சென்றார்.
ரிங் ரோட்டில் உள்ள ஏ.வி.எஸ்., லே அவுட் பிரிவு சாலை அருகே அவ்வழியாக ஓசூர், சாந்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன், 23, மதுபோதையில் கிரான்ட் ஐ - 10 காரை, தவறான பாதையில் ஓட்டி வந்து, ஸ்கூட்டர் மீது மோதினார்.
படுகாயமடைந்த குழந்தை கீர்த்திகா, தாய் கண்ணெதிரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
படுகாயமடைந்த ரஞ்சனா கிருஷ்டி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து ஏற்படுத்திய கார்த்திகேயனை, சிப்காட் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.