/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'பசுமை குடில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியது அ.தி.மு.க., கட்சி தான்'
/
'பசுமை குடில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியது அ.தி.மு.க., கட்சி தான்'
'பசுமை குடில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியது அ.தி.மு.க., கட்சி தான்'
'பசுமை குடில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியது அ.தி.மு.க., கட்சி தான்'
ADDED : ஏப் 04, 2024 05:01 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ.,வுடன் சென்று, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உங்கட்டி, தோரிப்பள்ளி, தாசனபரம், கானலட்டி, புளியரசி உள்ளிட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். கேரட் சாகுபடி செய்திருந்த விவசாய நிலங்களுக்கு சென்ற வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், கன்னட மொழியில் பேசி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
விவசாயிகளிடம் பேசிய முனுசாமி, 'சூளகிரி விவசாயம் நிறைந்த பகுதி. இப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்திருந்தாலும், சிப்காட்டிற்கு விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது என தடுத்துள்ளோம். விவசாய பகுதிகளுக்கு நீர் ஆதாரம் குறைவாக உள்ள காரணத்தினால், சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும் என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் கனிவுடன் கேட்டு, சொட்டுநீர் பாசனம் அமைக்க, 75 சதவீதம் மானியம் வழங்கி உத்தரவிட்டார். சிறு விவசாயிகளின் பசுமை குடில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் ஜெயலலிதா தான். விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி, அ.தி.மு.க.,தான். எனவே, வேட்பாளர் ஜெயப்பிரகாைஷ வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சதிஷ்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பஞ்., தலைவர்கள் சுரேஷ், ரத்தினம்மா கிருஷ்ணப்பா, நிர்வாகி மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

