/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருமணமான 15 நாளில் புதுப்பெண் கடத்தல்
/
திருமணமான 15 நாளில் புதுப்பெண் கடத்தல்
ADDED : ஜூலை 06, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அடுத்த மாட்டோணியை சேர்ந்தவர் மோகன்குமார், 26, விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஷர்மிளா, 19 என்ப-வரை காதலித்து, 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த, 4ல், மோகன்குமார், தன் மனைவி ஷர்மிளா-வுடன் கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள அவரது மாமா ஆஞ்சி-யப்பன் வீட்டிற்கு வந்தார். மாலை, 6:30 மணியளவில் மோகன்-குமாரும், ஷர்மிளாவும் வெளியில் சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் மோகன்குமாரை தாக்கி ஷர்மிளாவை கடத்தி சென்-றனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் மோகன்குமார் அளித்த புகார்படி, பழையபேட்டை ஆரீப், 25, உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.