/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
ADDED : ஆக 27, 2024 02:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பழையபேட்டை கிருஷ்ணர் கோவில், லட்சுமி நாராயண சுவாமி கோவில், காந்தி-நகர் வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் தர்மராஜா கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், பழையபேட்டை, நரசிம்மசுவாமி கோவில் தெரு, நேதாஜி சாலை, மகாராஜகடை சாலை வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள், 60வது ஆண்டு ஸ்தாபன தினம் மற்றும், 3ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. வி.எச்.பி., மாவட்ட தலைவர் திலீப்-குமார் தலைமை வகித்தார். வி.எச்.பி., மாநில துணைத்தலை-வர்கள் ஞானகுரு, நடராஜன் ஆகியோர் பேசினர். இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து, பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து, சென்னை சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
பர்கூர் அடுத்த குமரங்கனப்பள்ளி கோகுல்நகர் கோகுலகி-ருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டையும், கிருஷ்ண ஜெயந்தி விழாவும் நடந்தது. காலை, கோகுல கிருஷ்ணரின் ஐம்பொன் திருவுருவச்சிலைக்கு பிரதிஷ்டையும், சிறப்பு அபி-ஷேக ஆராதனை, அலங்காரம், அர்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கோகுலகிருஷ்ணர் அருள்பாலித்தார்.
* ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணை பகுதியிலுள்ள ராதா, ருக்மணி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. தொடர்ந்து கோமாதா பூஜை, ராதா ருக்மணி வாசுதேவ கண்ணன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*தேன்கனிக்கோட்டையிலுள்ள அஞ்செட்டி சாலையிலுள்ள, இஸ்கான் கோவிலில், கிருஷ்ணர் மற்றும் பலராமர் சிலைக்கு நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 7:30 முதல், இரவு, 10:00 மண வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர் கோகுல் நகரிலுள்ள வேணுகோபால சுவாமி கோவிலில், வேணுகோபாலர் ராதா, ருக்மணி சமேதராய் கையில் புல்லாங்குழ-லுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெண்ணெய் காப்பு அலங்-காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குழந்தைக-ளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பக்தர்கள் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர்.