/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி எண்ணேகோல் வாய்க்கால் நீட்டிப்பு பணி ஆய்வு
/
கிருஷ்ணகிரி எண்ணேகோல் வாய்க்கால் நீட்டிப்பு பணி ஆய்வு
கிருஷ்ணகிரி எண்ணேகோல் வாய்க்கால் நீட்டிப்பு பணி ஆய்வு
கிருஷ்ணகிரி எண்ணேகோல் வாய்க்கால் நீட்டிப்பு பணி ஆய்வு
ADDED : ஆக 05, 2024 01:47 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே, எண்ணேகோல் அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுறத்தில் இருந்து புதிய வாய்க்கால் அமைத்து, தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் செல்லும்போது, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வறட்சியான பகுதிகளுக்கு, உபரி நீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 233.34 கோடி ரூபாய் மதிப்பில் வாய்க்கால்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இத்திட்டம் மூலம், 33 ஏரிகள் மற்றும் ஒரு அணையின் பாசன பரப்பான, 3,408 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். குருபரப்பள்ளி, போலுபள்ளி, பெல்லம்பள்ளி, அகரம், கத்தேரி பகுதிகளில் வாய்க்கால் அமையும் இடங்களில், திருவண்ணாமலை பெண்ணையாறு வடிநில வட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் தமிழ்செல்வன் ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
தற்போது, 51 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நில எடுப்பு பணிகளை விரைந்து முடித்து, இத்திட்டத்தை உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நீர்வளத்துறை அலுவலர்கள் மற்ற துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, தர்மபுரி பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி மற்றும் உதவி பொறியாளர்கள் சையது ஜாகிருதீன், கார்த்திகேயன் உடனிருந்தனர்.