/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியும் காலி; கலகலக்கும் நாம் தமிழர்
/
கிருஷ்ணகிரியும் காலி; கலகலக்கும் நாம் தமிழர்
ADDED : டிச 21, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பல மாவட்டங்களில் உள்ள, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலர் சூரியா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சூர்யா அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு பதவிகளை கொடுத்து, உழைத்தவர்களை புறக்கணித்து வருகின்றனர்.
கட்சிக்காக பொருளாதரம் இழந்து, 10 ஆண்டுகளாக பாடுபட்ட எங்களை, சீமான் கேவலமாக பேசுகிறார். துளியும் மரியாதை இல்லாததால், கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி விட்டோம்' என்றார்.