/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை மஸ்ஜித் புதிய நிர்வாக குழுவினர் தேர்வு

ADDED : ஜூலை 06, 2024 08:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை ஷாஹி மஸ்ஜித் வளாகத்தில், டி.எச்.முஸ்தாக் அஹமது தலைமையில், எஸ்.கே.நவாப் முன்னிலையில் ஹாஜி மொஹல்லா ஜமாதார்கள் கூட்டம் நடைபெற்றது.
ஜிம்மா தொழுகைக்கு பிறகு, ஜமாதார்கள் கூடி எடுத்த தீர்மானம்படி, ஷாஹி மஸ்ஜித்துக்கு வழக்கப்படி செலக்சன் முறையில், புதிய நிர்வாக குழு தேர்வு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தலைவராக எஸ்.கே.நவாப், துணை தலைவராக டி.எச்.பாரூக் அஹமத், செயலாளராக சி.பையாஸ் பாஷா, துணை செயலாளராக எம்.முஹமத், பொருளாளராக யு.அத்தாவுல்லா ஷெரீப், உறுப்பினர்களாக என்.சுஹேல், எஸ்.தாஜீத்தீன், டி.எச்.சலீம் அஹமத், எஸ்.ரியாஸ் அஹமத், டி.ஏஜாஸ், ஆர்.வாஜீத், ஏ.ஜாகீர் உசேன், எம்.காதீர் அஹமத், என்.கவுஸ் ஆகியோரும், டி.எச். முஸ்தாக் அஹமது கவுரவ தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.