/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மோசமாக நடந்த சாலை பேட்ஜ் பணி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
மோசமாக நடந்த சாலை பேட்ஜ் பணி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
மோசமாக நடந்த சாலை பேட்ஜ் பணி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
மோசமாக நடந்த சாலை பேட்ஜ் பணி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : மே 18, 2024 01:29 AM
ஓசூர்: ஓசூரில், மாநகராட்சி நிர்வாகம் மூலம் மோசமான நிலையில் பேட்ஜ் ஒர்க் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 41 வது வார்டுக்கு உட்பட்ட ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ், 10ல் உள்ள, 36, 38, 39, 40, 41 மற்றும் பாலாஜி நகர் சவுத் இந்தியன் வங்கி அருகே உள்ள குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில், சாலை மோசமாக இருந்ததால்
மாநகராட்சி நிர்வாகம்
மூலம் பேட்ஜ் ஒர்க் பணிகள் நடந்தன.
இதில், 38 வது குறுக்கு தெரு மற்றும் சவுத் இந்தியன் வங்கி அருகே உள்ள குறுக்கு தெருவில், தரமற்ற முறையில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. ஒரு கனமழை பெய்ததால் கூட சாலையில் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் குண்டும், குழியுமாக மாறி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, 41 வது வார்டு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன், மாநகராட்சி கமிஷனர் சினேகா, செயற்பொறியாளர் ராஜாராம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், இதுவரை பேட்ஜ் ஒர்க் பணியை அவர்கள் பார்வையிடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு
வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

