/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2.10 லட்சம் கன அடி நீர்வரத்தால் வெள்ளக்காடான ஒகேனக்கல்
/
2.10 லட்சம் கன அடி நீர்வரத்தால் வெள்ளக்காடான ஒகேனக்கல்
2.10 லட்சம் கன அடி நீர்வரத்தால் வெள்ளக்காடான ஒகேனக்கல்
2.10 லட்சம் கன அடி நீர்வரத்தால் வெள்ளக்காடான ஒகேனக்கல்
ADDED : ஆக 02, 2024 01:15 AM
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்ததால், ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறி உள்ளது.
கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 2 நாட்களுக்கு முன், கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு, 2.20 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று கபினியிலிருந்து வினாடிக்கு, 50,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 97,292 கன அடி என மொத்தம், 1.47 லட்சம் கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வினாடிக்கு, 1.40 லட்சம் கன அடியாக வந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடகாக மாறியுள்ளது.
கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. நேற்று, 17 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. ஒகேனக்கலுக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் மடம் செக்போஸ்டிலேயே தடுத்து, போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.
வருவாய் துறை, போலீசார், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு துறையினர் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.