/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஓசூரில் வி.ெஹச்.பி., சார்பில் ஊர்வலம்
/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஓசூரில் வி.ெஹச்.பி., சார்பில் ஊர்வலம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஓசூரில் வி.ெஹச்.பி., சார்பில் ஊர்வலம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஓசூரில் வி.ெஹச்.பி., சார்பில் ஊர்வலம்
ADDED : ஆக 27, 2024 02:25 AM
ஓசூர்: ஓசூரில், அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்-ரங்தள் ஆகியவை சார்பில், 11ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், இணை செயலாளர் விஷ்ணுகுமார் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்-தைகள் மற்றும் அவர்களது பெற்றோர், பெண்கள் என பலர் பங்-கேற்ற ஊர்வலம் நடந்தது. ஓசூர் ஜி.ஆர்.டி., அருகே இருந்து துவங்கிய ஊர்வலம், தாலுகா அலுவலக சாலை, எம்.ஜி., ரோடு, ராகவேந்திரா கோவில், நேதாஜி ரோடு, ஏரித்தெரு, காந்தி சிலை, எம்.ஜி., ரோடு வழியாக சென்று மீண்டும் ஜி.ஆர்.டி., அருகே நிறைவு பெற்றது.
அங்கு, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்-கப்பட்டன. அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், தேவராஜ், பஜ்தரங்தள் மாநில அமைப்பாளர் கிரண்குமார், மாவட்ட தலைவர் லோகேஷ், பொருளாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.