/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
/
குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
ADDED : ஆக 11, 2024 03:29 AM
ஓசூர்: ஓசூரில், குடிநீர் இல்லாமல் சிரமப்படும் கே.சி.சி., நகர் மக்கள், சாலை
மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 6 வது வார்டுக்கு உட்பட்ட
கே.சி.சி., நகரில், 1,200 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு, தனியார் லே அவுட் நிர்வாகம் மூலம் போடப்பட்ட, 3 போர்-வெல்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த, 4 மாதமாக சரியான முறையில் குடிநீர் வழங்கப்பட-வில்லை.
கடந்த, ஒரு மாதத்திற்கு முன், 3 போர்வெல் மின்மோட்டார்க-ளுக்கு, 17 லட்சம் ரூபாய் மின்கட்டணம் பாக்கி இருந்ததால், மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்தது. இதனால், அவ்வப்-போது கிடைத்து வந்த குடிநீரும் மக்களுக்கு கிடைக்காமல் போனது. கே.சி.சி., நகர் லே அவுட்டை உருவாக்கிய சம்பத்-செட்டி, 6 லட்சம் ரூபாயும், அப்பகுதி மக்கள், 4 லட்சம் ரூபாயும் என மொத்தம், 10 லட்சம் ரூபாயை மின்வாரியத்திற்கு கட்டினர். மீதமுள்ள, 7 லட்சம் ரூபாயை கட்டினால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் கூறி விட்டது.
இதற்கிடையே, மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மாநக-ராட்சி மூலம் ஒரு புதிய போர்வெல் போடப்பட்டது. பழைய மின்பாக்கியை கட்டாததால், புதிய இணைப்பு கொடுக்க முடி-யாது என மின்வாரியம் கூறி விட்டது. மக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் மம்தா சந்தோஷிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய, 7 லட்சம் ரூபாய் பாக்-கியை, சம்பத்செட்டியும் கட்டாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் நேற்று காலை குடிநீர் கேட்டு சாலைமறியல் செய்ய அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹட்கோ போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் (௧௨ம் தேதி) குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்ப-தாக உறுதியளித்தனர். குறிப்பிட்ட தேதியில் குடிநீர் வழங்கா-விட்டால், 14 ல் சாலைமறியல் போராட்டம் செய்வோம் என கூறி மக்கள் கலைந்து சென்றனர்.

