/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்சோவில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கலெக்டரிடம் மக்கள் மனு
/
போக்சோவில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கலெக்டரிடம் மக்கள் மனு
போக்சோவில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கலெக்டரிடம் மக்கள் மனு
போக்சோவில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கலெக்டரிடம் மக்கள் மனு
ADDED : பிப் 25, 2025 07:08 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
காவேரிப்பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 80க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அங்கு பயிலும், பத்தாம் வகுப்பு மாணவர், மாணவியரை தொந்தரவு செய்ததை, பள்ளி பட்டதாரி ஆசிரியர் உசேன், 40, தட்டிக்கேட்டு, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆசிரியர் உசேன் மீது, மாணவருக்கு முன்விரோதம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவனை பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரியர் உசேன் மீது பொய் புகார் அளித்துள்ளனர். இதனால் கடந்த, 14ல் போக்சோவில் கைதாகி உள்ளார்.
இதுகுறித்து தீர விசாரித்து, ஆசிரியரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.