/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் திருட்டு குற்றங்கள் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
/
கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் திருட்டு குற்றங்கள் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் திருட்டு குற்றங்கள் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் திருட்டு குற்றங்கள் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
ADDED : மே 14, 2024 06:59 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகரில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி நகரின், பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு இரவில் மர்ம நபர்கள் நடமாட்டமும் திருட்டும் அதிகரித்துள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகம், லைன்கொள்ளை பகுதிகளில், 'குடி'மகன்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த வழியாக செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மது, கஞ்சா போதையில் நகருக்குள் உலா வருவோரை போலீசார் கண்காணிப்பதில்லை. நகரில் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த, 15 நாளில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரு சைக்கிள்கள் திருடு போனது. ஒரு பல்சர் பைக், ஸ்பிளண்டர் பைக்கை திருட முயற்சி செய்துள்ளனர். அதில், ஒருவரை பிடித்து வைத்த நிலையில் போலீஸ் வர தாமதமானதால் தப்பி சென்று விட்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன், ஒரு வீட்டில் சிலிண்டர், மற்றொரு வீட்டில் போன் திருடு போனது. நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றவரை பொதுமக்களே பிடித்தனர். விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த கோகுல் என தெரிந்தது. கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்த நிலையில், அவர் மீதும் வழக்கு போடவில்லை. போலீசார் இரவு நேர ரோந்தை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், “இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இரவு ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு அறிவுறுத்தப்படும். பொதுமக்கள் சிறு சம்பவங்களாக இருந்தாலும், போலீசாரிடம் புகார் தெரிவியுங்கள். புகாரை எடுக்கா விட்டால் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,” என்றார்.

