/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
/
அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
ADDED : மே 18, 2024 01:27 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்னபேலகொண்டப்பள்ளி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டி தருமாறு, பள்ளி தலைமையாசிரியர் கவுரம்மா, டைட்டன் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். மாவட்ட கலெக்டர் சரயுவிடம் உரிய அனுமதி பெறப்பட்ட பின், நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 26 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவன பொது மேலாளரும், பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவருமான சண்முகம், பணியை துவக்கி வைத்தார். மூத்த மேலாளர்கள் கேசவன், ஹரிஹரன், ராமசாமி, மாவட்ட வள அலுவலர் நிக்கோலா பிரகாஷ், பி.டி.ஓ., ராஜூ, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீனிவாசரெட்டி, சின்னபேலகொண்டப்பள்ளி பஞ்., தலைவி சாவித்திரியம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.

