ADDED : செப் 18, 2024 01:45 AM
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
ஓசூர், செப். 18-
ஓசூர், மாநகர கிழக்கு பகுதி, பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, மாநகர தலைவர் மணிகண்டன் தலைமையில், ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள வேல்முருகன் கோவிலில், நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். மாநில நிர்வாகிகள் வேலாயுதம், கருணாநிதி, மாவட்ட பொருளாளர் சீனிவாசன், செயலாளர் பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மாநகர துணைத்தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் வெங்கடேசலு செய்திருந்தனர்.
அதேபோல், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், ஒன்றிய தலைவர் சந்துரு தலைமையில், கெலமங்கலத்தில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ஒன்றிய பொதுச்செயலாளர் மஞ்சுநாத், துணைத்தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரை, பா.ஜ., சார்பில் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாவட்ட செயலாளர் வரதன் தலைமை வகித்தார். மண்டல உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் சிவா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் மாதவன், மண்டல பார்வையாளர் தனக்கோடி, மண்டல உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
டவுன் பஞ்.,ல் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு, இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. பா.ஜ., நிர்வாகிகள் சங்கர், மகேந்திரன், சென்ன கிருஷ்ணன், மகளிரணி ஆனந்தஜோதி உட்பட பலர் கலந்து
கொண்டனர்.