/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மோளையானுாரில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்
/
மோளையானுாரில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்
ADDED : ஆக 01, 2024 01:49 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், மோளையானுார், அதிகாரப்பட்டி, ஆலாபுரம் ஆகிய, 3 ஊராட்சிகளுக்கும், மோளையானுார் சமுதாய கூடத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில் கிராமப்புற மக்களுக்கு, 18 அரசு துறைகள் மூலம், 44 வகையான சேவைகள் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி தனி தாசில்தார் பெருமாள், பி.டி.ஓ., க்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், துணை பி.டி.ஓ.,க்கள் கோபிநாத், ராஜேந்திரன், மின் வாரிய உதவி செயற் பொறியாளர் துர்கதர்ஷினி, உதவி பொறியாளர்கள் ஹசினா, சதீஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெற்றனர். இம்மனுக்கள் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 454 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் துரை பாண்டியன், யசோதா ஜெயராமன், தெய்வானை சின்னராஜ், ஊராட்சி செயலாளர்கள் முத்து, கிருஷ்ணமூர்த்தி, நிஷாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.