sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

1 கிலோ கோதுமையில் கால் பங்கு குச்சி, கழிவு

/

1 கிலோ கோதுமையில் கால் பங்கு குச்சி, கழிவு

1 கிலோ கோதுமையில் கால் பங்கு குச்சி, கழிவு

1 கிலோ கோதுமையில் கால் பங்கு குச்சி, கழிவு


ADDED : ஜூன் 20, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,094 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதன் வாயிலாக மாவட்டத்தில், 5.63 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர்.

குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும், 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. சர்க்கரை, சமையல் எண்ணை, துவரம் பருப்பு போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இலவச அரிசிக்கு பதிலாக, 2 கிலோ கோதுமை பெறலாம். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையிலுள்ள ரேஷன் கடையில், 700க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இங்கு நேற்று முன்தினம் வழங்கிய கோதுமையில், 1 கிலோவிற்கு கால் கிலோ குச்சி மற்றும் கழிவுகள் இருந்ததால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்; கழிவுகளை சுத்தம் செய்ய மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுபோல, சில ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட கோதுமையில் கழிவுகள் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். எனவே, வரும் காலங்களில் சுத்தமான கோதுமையை வழங்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us