/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 09, 2024 03:21 AM
கிருஷ்ணகிரி: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து, துண்டு பிரசுரம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன துவக்க விழா நடந்தது. இவற்றை, மாவட்ட கலெக்டர் சரயு கொடிய-சைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்-கினார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தில், மழைநீரை முழுமையாக சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து, மழைநீரை சேகரித்து, தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம். கண்மாய், குளம், ஊரணி, ஏரி, பழமை-யான நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்-துவோம். வீடுகளில் மழைநீர் சேகரிக்க வீட்டு கூரையை மழைக்-காலத்திற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். 1,000 லி., சேமிப்-புக்கு, 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கரைசலை, சேமிக்கப்பட்ட மழைநீரில் கலக்க வேண்டும். வீட்டுக்கூரையின் மேல் விழும் மழைநீரை, வடிகுழாய் மூலம் கொண்டு வந்து, மணல் வடிப்-பானில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இப்பேரணி, புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கி, பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியா-ளர்கள் ரவிக்குமார், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.