/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் பறக்கும்படையினர் ரூ.3.29 லட்சம் பறிமுதல்
/
தேர்தல் பறக்கும்படையினர் ரூ.3.29 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 11, 2024 12:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், ஜீமங்கலம் மற்றும் பூனப்பள்ளியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
இதில் உரிய ஆவணமின்றி இருவர் கொண்டு சென்ற, 1.62 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அப்பணம், ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி பறக்கும் படையினர், கே.என்., தொட்டி பகுதியில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 1.67 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

