/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்
/
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.71.24 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 30, 2024 03:21 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட. ரூ.71.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி லோக்சபை தேர்தலையொட்டி ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் சுழற்சி முறையில், 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட, 71 லட்சத்து, 24 ஆயிரத்து, 440 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு ஆய்வுக்கு பின், 7 லட்சத்து, 35 ஆயிரத்து, 100 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை தொடர்பான மேல்
முறையீடுகளை, ஆய்வு செய்ய கூடுதல் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

