/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வாட்ஸ் ஆப்பில்' ரூ.10,000 'அபேஸ்'
/
'வாட்ஸ் ஆப்பில்' ரூ.10,000 'அபேஸ்'
ADDED : செப் 01, 2024 03:21 AM
கண்ணமங்கலம்: கண்ணமங்கலத்தில் 'வாட்ஸ் ஆப்' குரூப்புகளில் நுழைந்த ஹேக்-கர்கள், இ-சேவை மைய உரிமையாளர் வங்கி கணக்கில், 10,000 ரூபாயை 'அபேஸ்' செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் இ-சேவை மையம் நடத்தி வருபவர் முருகன், 41; இவரது 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் ஒரு செய்தி, ஒரு லிங்க் வந்தது. அதில், 'உங்கள் எஸ்.பி.ஐ., நெட் பேங்கில் வெகுமதி புள்ளிகள், 5,800 ரூபாய் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இன்று காலாவதியாகி விடும்.
இப்போது ரிவார்ட் செயலியை நிறுவி, ரிடீம் செய்து, உங்கள் கணக்கில் ரொக்க டிபாசிட் மூலம், ரிவார்டை பெறுங்கள். நன்றி - எஸ்.பி.ஐ' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய முருகன், லிங்கை தொட்ட அடுத்த வினாடியே அவரது, 'வாட்ஸ் ஆப்' புரொபைல் படம் எஸ்.பி.ஐ., லோகோவாக மாறி-யது. அவர் இருந்த அனைத்து, 'வாட்ஸ் ஆப்' குருப்களுக்கும், அந்த லிங்க் பார்வார்ட் ஆனது. சிறிது நேரத்தில் முருகனின் வங்கி கணக்கிலிருந்த, 10,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. அவர் புகார் படி, திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலக சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.