/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேனில் கடத்தப்பட்ட புகையிலை பறிமுதல்
/
வேனில் கடத்தப்பட்ட புகையிலை பறிமுதல்
ADDED : மே 12, 2024 01:01 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட, 900 கிலோ புகையிலை பொருட்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இதன் மதிப்பு, 6.05 லட்சம் ரூபாய்.
விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகையிலைப்பொருட்களை வாங்கி, கிருஷ்ணகிரி வழியாக திண்டுக்கலுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
இதையடுத்து வேனில் இருந்த திண்டுக்கல் அசோக் நகரை சேர்ந்த சரவணகுமார், 38, ஆர்.எம்., காலனி மணிகண்டன், 45, சந்தோஷ், 22 ஆகிய மூவரை கைது செய்த போலீசார், பிக்கப் வேனுடன், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.