/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஆக 18, 2024 03:51 AM
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே, பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.
தமிழக வனத்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மாச-னட்டி பழங்குடியின கிராமத்தில், சூழல் மேம்பாட்டு குழுவின-ருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி துவக்கி வைத்தார்.
இதில், மாசனட்டி கிராமத்தில் சூழல் மேம்பாட்டு குழுவிலுள்ள, 20 பெண்களுக்கு தையற்கலை பயிற்சியும், 20 மாணவ, மாணவி-யருக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக மகளிருக்கு தையல் பயிற்சி உபகரணங்களும், மாணவ, மாணவி-யருக்கு புத்தகப்பை, உபகரணங்களும் வழங்கப்பட்டது. கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின், மகளிர் மட்டும் குழந்-தைகள் நலப்பிரிவு இயக்குனர் தேவகி பரமசிவம், அஞ்செட்டி வனச்சரக அலுவலர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.

