ADDED : ஆக 14, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர், சிப்காட் கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வருவாய் துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.
அப்போது, பல்லுார் அருகே சிப்காட் செல்லும் சாலையில் நின்றிருந்த ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன் புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரான காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரத்தை சேர்ந்த ஞானபிரகாஷ் மற்றும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
