/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் இதுவரை ரூ.1.62 கோடி பறிமுதல்
/
மாவட்டத்தில் இதுவரை ரூ.1.62 கோடி பறிமுதல்
ADDED : ஏப் 06, 2024 01:56 AM
கிருஷ்ணகிரி:தமிழகம்
முழுவதும் வரும், 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதையடுத்து
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளிலும்
பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன
தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஊத்தங்கரை சட்டசபை
தொகுதியில், 8 லட்சத்து 71 ஆயிரத்து 10 ரூபாய், பர்கூர் தொகுதியில், 30
லட்சத்து, 8,380, கிருஷ்ணகிரி தொகுதியில், 10 லட்சத்து, 24
ஆயிரத்து, 640, வேப்பனஹள்ளி தொகுதியில், 30 லட்சத்து, 78 ஆயிரத்து
190, ஓசூர் சட்டசபை தொகுதியில், 44 லட்சத்து 43 ஆயிரத்து, 620, தளி
தொகுதியில், 38 லட்சத்து 51 ஆயிரத்து, 500 ரூபாய் என இதுவரை மொத்தம்,
ஒரு கோடியே, 62 லட்சத்து, 76 ஆயிரத்து, 980 ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.

