ADDED : செப் 17, 2024 01:14 AM
சமூக நீதி நாள்
உறுதிமொழி
கிருஷ்ணகிரி, செப். 17-
ஈ.வெ.ரா., பிறந்த தினமான செப்., 17ம் தேதி, ஆண்டுதோறும், 'சமூக நீதி நாள்' ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்., 17 மிலாடி நபி அரசு விடுமுறை தினம் என்பதால், நேற்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், 'சமூகநீதி நாள்' உறுதிமொழியை கலெக்டர் சரயு தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்.
* கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார், பல்துறை பேராசிரியர் டாக்டர் ஜெகன்பாபு, நிர்வாக அலுவலர் சரவணன் உட்பட, கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள், அமைச்சு பணியாளர்கள், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.