/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் இடியும் நிலையில் கட்டடங்கள் வெயிலில் அமர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர்

ADDED : செப் 08, 2024 01:20 AM
அரசு பள்ளியில் இடியும் நிலையில் கட்டடங்கள்
வெயிலில் அமர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர்
போச்சம்பள்ளி, செப். 8-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, அத்திகானுார் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில், 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே உள்ளன. தற்போது 6, 7, 11 ம் வகுப்பறை கட்டடங்கள், அதேபோல் தலைமையாசிரியர் அறை மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம், கணிணி அறை, நுாலகம் உள்ளிட்ட, 3 கட்டடங்கள் முற்றிலும் சேதமாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சேதமான அக்கட்டட பகுதிக்கு மாணவர்கள் செல்ல வேண்டாம் என, பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர். இதனால், மாணவ, மாணவியர் மரத்தின் அடியிலும், பள்ளி வளாகத்தின் முன்னும் அமர்ந்து படிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக, இப்பள்ளி சாதனை படைத்து வருகிறது. எனவே, மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், சேதமான கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டி தர மாணவர்கள் அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.