/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்
/
கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்
கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்
கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்
ADDED : ஏப் 13, 2024 10:41 AM
ஓசூர்: சூளகிரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலை பஞ்.,க்கு உட்பட்ட ஓட்டையப்பன் கொட்டாய் கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இக்கிராமத்திற்கு செல்ல, தனியார் பட்டா நிலத்தின் வழியாக தான் மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தனியார் எதிர்ப்பு தெரிவிப்பதால், மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இக்கிராமத்திற்கு சரியான சாலை வசதி இல்லை. மேலும், குடிநீர் பிரச்னையும் அதிகமாக உள்ளது.
இப்பிரச்னைகளை அதிகாரிகள் தீர்த்து வைக்காததால், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக கூறி, வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தகவலறிந்த சூளகிரி தாசில்தார் சக்திவேல், மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வனப்பகுதி வழியாக கிராமத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வனப்பகுதி வழியாக சாலை அமைக்க முடியாது என்பதால், அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். குடிநீர் பிரச்னையை தீர்க்க, சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் தாசில்தார் சக்திவேல் பேசினார். அப்போது, கூடுதலாக ஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்குகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் சமாதானமடைந்து சென்றனர்.

