/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரேக் பிடிக்காத டவுன் பஸ் வயலில் இறங்கி விபத்து
/
பிரேக் பிடிக்காத டவுன் பஸ் வயலில் இறங்கி விபத்து
ADDED : ஆக 09, 2024 03:22 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சூளகிரி வழியாக கீழ்-மொரசுப்பட்டி கிராமத்திற்கு கடந்த, 1ல், 70ம் நம்பர் அரசு டவுன் பஸ் சேவையை, அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று மதியம் புறப்பட்ட டவுன் பஸ், கீழ் மொரசுப்பட்டி கிராமத்திற்கு மதியம், 3:30 மணிக்கு வந்தது. பராமரிப்பில்லாத டவுன் பஸ், இயக்கப்பட்டதால், கீழ்மொரசுப்பட்டி கிராமத்திற்குள் வரும்-போது பிரேக் பிடிக்கவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்த பஸ், பின்நோக்கி சென்று, சாலையோர பள்-ளத்தில் இருந்த நெல் வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது.
பஸ்சில் இருந்த, 20க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியடித்-தனர். கிராம மக்கள் வந்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். பஸ்சின் பின்புற கண்-ணாடி உடைந்தது. அங்கிருந்த இரு தென்னை மரங்கள் முறிந்-தன. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.