/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
/
5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : செப் 05, 2024 03:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சேலம் சரக டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 3ல், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் சூளகிரி வட்ட வழங்கல் அலுவலர் தீபா மற்றும் போலீசார், முகலப்பள்ளி அடுத்த சான-மங்கலத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை நிறுத்தி சோதனையிட்டதில், 100 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.
விசாரணையில் ஸ்கூட்டரில் வந்தவர் ஓசூர், ராம் நகரை சேர்ந்த முகமது இம்ரான், 24 என்பதும், இப்பகுதிகளில் ரேஷன் அரி-சியை வாங்கி கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் சீனிவாஸ் என்பவருக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது இம்ரான் மற்றும் சீனிவாசையும் கைது செய்தனர்.